search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹம்பந்தோடா துறைமுகம்"

    இந்தியாவின் நெருக்கடி காரணமாக சீனாவுக்கு குத்தகைக்கு விட்ட துறைமுகத்தில் இலங்கை அரசு தன்நாட்டு கடற்படை ராணுவ தளத்தை அமைத்துள்ளது. #HambantotaPort
    கொழும்பு:

    இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுக்கு அதிபர் ராஜபக்சே அரசு ரூ.70 ஆயிரம் கோடிக்கு சீனா நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டது.

    அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மூலம் சீனா இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என அதிருப்தியை வெளியிட்டது.

    இலங்கை எதிர்க்கட்சியினரும் அரசின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அங்கு சீனா ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என போர்க்கொடி உயர்த்தினர்.

    அதை தொடர்ந்து ஹம்பந்தோடா துறைமுகத்தில் இலங்கை தனது கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அங்கு கடற்படையின் தெற்கு கமாண்டோ பிரிவை நிறுவுகிறது.

    அதற்கான அறிவிப்பை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நேற்று வெளியிட்டார். தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு சீனா எந்தவித ராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்றார். தற்போது இலங்கை கடற்படையின் தென் கமாண்டோ பிரிவு காலே துறைமுகத்தில் உள்ளது. அது விரைவில் ஹம்பந்தோடாவுக்கு மாறுகிறது. #HambantotaPort
    ×